business

img

விமான எரிபொருள் மீதான ‘வாட்’ வரியை குறைக்கவாம்... 22 மாநிலங்களுக்கு ஜோதிராதித்ய சிந்தியா கடிதம்....

புதுதில்லி:
விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று 22 மாநிலஅரசுகளுக்கு ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார்.விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை4 சதவிகிதத்திற்கு உள்ளாக மாநிலங்கள் குறைக்க வேண் டும் என அவர் கூறியுள்ளார். 

விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான சேவைக்கான ஒட்டுமொத்தசெலவும் கணிசமாக அதிகரிப்பதாகவும், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் விமான எரிபொருள் மீதான வரியை குறைத்துள் ளதால் அங்கெல்லாம் விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சிந்தியா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரியை ஒரு பைசா கூட குறைக்க முன்வராத மோடி அரசு, மாநிலங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச வரி ஆதாரமான ‘வாட்’ வரியை குறைக்குமாறு வலியுறுத்துவது வேடிக்கையானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

;